தனி விமானம் மூலம் கொச்சின் சென்ற நயன்தாரா விக்னேஷ் சிவன்!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா, கமல்ஹாசன் தவிர மற்ற அனைத்து கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார் அதனால்தான் இவரை தென்னகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் என அலைக்கின்றனர்.

நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வருகின்றனர். தற்போது வரை இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற போதிலும் ஓரே வீட்டில் வாழ்ந்து வருவதோடு, ஒன்றாகவே ஊர் மற்றும் கோயில், கோயிலாக சுற்றி வருகின்றனர்.

மேலும் ஜோசியத்தில் மிகவும் ஈடுபாடு உடைய நயன்தாரா ஜாதகத்தின் அடிப்படையில் தோஷம் உள்ளதாகவும் அதனால்தான் விக்னேஷ் சிவன், நயன்தாரா ஜோடி கோயில் கோயிலாக சென்று பரிகாரம் செய்து வருவதாகவும் கிசு கிசு பட்டு வருகிறது.

தற்போது அவர்கள் இருவரும் ஓணம் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றுள்ளனர். கொச்சியில்தான் நயன்தாராவிற்கு பூர்விகமான வீடு உள்ளது அங்கு இருவரும் ஓணம் பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதற்காக இருவரும் தனி விமானம் மூலம் கொச்சி சென்றனர்.

பல மாதங்கள் கழித்து விமானத்தில் பயணம் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டு, இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூகவலைதளப்பக்கதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நயன்தாராவோ தனது டுவிட்டர் பக்கத்தில் , ‘ஓணம் நல்வாழ்த்துக்கள், கொச்சின்’ என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version