தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக திரைப்பட விநியோகஸ்தர் கணேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகில் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ் படம் மாஸ்டர். கார்த்தியின் கைதி படத்தை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
தளபதி விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் தளபதி விஜய் உடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஸ்ரீநாத், ரமேஷ் திலக், பிரேம், நாசர், சாய் தீனா, சுனில் ரெட்டி, பிரிகிதா, கௌரி ஜி கிஷான், பூவையார் என்று ஏராளமானோர் நடித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருந்தது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு பிரபலங்கள் முதல் கோடிக்கணக்கான ரசிகர்கள் வரை பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், ரசிகனோடு ரசிகனாக திரைப்பட விநியோகஸ்தர், கணேஷ் குமார் யாதவ்வும் காத்துக்கொண்டிருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வட இந்தியாவின் திரைப்பட விநியோகஸ்தர் என்ற முறையில், விஜய் நடிப்பில் வந்த தெறி மற்றும் சர்கார் ஆகிய படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன். இந்த இரு படங்களும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
கொரோனா லாக்டவுன் முற்றிலும் முடியும் வரை காத்திருக்கிறேன். அப்போது தான் மாஸ்டர் படத்தை திரையில் கண்டு ரசிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.