ஓடி டி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்த தனி அமைப்பை ஏற்படுத்துமாறு மனு…

ஓடிடி நிறுவனங்களை முறைப்படுத்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த உச்ச நீதுமன்றம், இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவிட்டுள்ளது.

பைரஸி என்பது தமிழ் சினிமாவை அழித்துக்கொண்டு இருக்கின்றது. திரையரங்களில் வெளியாகும் படங்கள் பைரஸி என்னும் பெரிய பிரச்சனையை சமாளித்து வந்தது. படங்கள் திரையரங்குகளில் வெளியாகி சற்று நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் எனும் தலத்தில் வெளியாகி பட தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இதனாலே தமிழ் திரை உலகத்திற்கு பெரும் ஆபத்து என்று கூட பலரும் கூறி வந்தனர்.

இந்த கொரோன காரணத்தினால் பலரும் தம் படங்களை திரையரங்கு திறக்கும் வரையில் காத்திராமல் ஓடிடி பல்டபோர்ம் அதனில் வெளியிடுகின்றனர். இதையும் இப்போது பைரஸி ஆட்கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி டெலிகிராம் என்ற அப்ப்ளிகாடின் அதனில் ஓடிடி தலத்தில் வெளியாகும் அணைத்து படங்களும் உப்லோஅது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஓடிடி நிறுவனங்களுக்கு அவுட்ரேட்’ ஆக படங்களை விற்கும் தயாரிப்பாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், பங்கு அடிப்படையில் படங்களைக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் எஸ்.சேகர் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,’நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட ஓடிடி எனப்படும் இணையதள திரைப்பட நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரிப்பதாக நீதிமன்றம் இப்போது கூறியுள்ளது மேலும் மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version