பா.ரஞ்சித் – தினேஷ்  கூட்டணியில் கேங்ஸ்டர் திரைப்படம்!

பா.ரஞ்சித் – தினேஷ் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் மதுரை பின்னணியில், கேங்ஸ்டர் கதைகளமாக தயாராக உள்ளதாக தகவல்!

இயக்குனர் பா.ரஞ்சித் – தினேஷ் கூட்டணியில் 2012ம் ஆண்டு வெளியான ‘அட்டகத்தி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து மெட்ராஸ், கபாலி காலா, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் திரைப்படத்தை மிகப் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய முதல் பட நாயகனான அட்டகத்தி தினேஷ் உடன் புதிய படத்தில், இயக்குநர் பா.ரஞ்சித் இணைந்துள்ளார். தங்கலான் வெளியீட்டிற்கு பிறகு இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ள நிலையில் படத்திற்கான கதைக்களம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அட்டகத்தி தினேஷ்-ஐ வைத்து இயக்க உள்ள இப்படம் முழுக்க முழுக்க கேங்ஸ்டர் கதைக்களமாகவும், அவை மதுரை பின்னணியில் அமைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து தன்னுடைய படங்களின் மூலம் அரசியல் பேசும் இயக்குனர் பா.ரஞ்சித், மதுரை பின்னணியில் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பது ரசிகர்களிடையே எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version