கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஐயப்பனும் கோஷியும் இந்தப்படம் தென்னிந்திய அளவில் மட்டுமல்ல, இந்தி திரையுலகின் கவனத்தையே ஈர்த்தது.

ஏன் என்றால் திரைக்கதை அமைத்த விதம். பிரித்விராஜ்-பிஜுமேனன் இணைந்து நடித்த இந்தப்படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ரீமேக் உரிமைகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டன. குறிப்பாக தெலுங்கில் பிஜுமேனன் மற்றும் பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரங்களில் தெலுங்கில் பாலகிருஷ்ணா-ராணா, ரவிதேஜா-ராணா நடிக்கிறார்கள் என அவ்வப்போது செய்திகள் கசிந்தன.
இந்தநிலையில் தற்போது புதிய தகவலாக பவன் கல்யாண் இந்தப்படத்தில் நடிக்க விரும்புகிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. இதில் பிஜுமேனன் நடித்த அய்யப்பன் நாயர் என்கிற போலீஸ் கேரக்டரில் நடிக்கத்தான் பவன் கல்யாண் ஆசை படுகிறாராம்.மேலும் பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே பவன் கல்யாண் அண்ணனான சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து அனைவரின் பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.வரும் செப்டம்பர்-2ஆம் தேதி பவன் கல்யாண் பிறந்தநாளன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தெரிவிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.