கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ’கூழாங்கல்’

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுக்குச் செல்லும் ’கூழாங்கல்’ திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படத்தை தங்களது ‘ரெளடி பிக்சர்ஸ்’ சார்பாக  நயன்தாரா-விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளது. தற்போது, சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் ஆஸ்கர் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க ’கூழாங்கல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏற்கனவே, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் போட்டியிட்ட ‘கூழாங்கல்’ தற்போது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கிறது. வரும் நவம்பர் 20 முதல் 25-ஆம் தேதி வரை சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நடைபெறுகிறது. 52-வது பதிப்பில் திரையிடப்படும் இந்திய பனோரமா பிரிவுக்கான திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வழக்கமான திரைப்படங்கள் பட்டியலில் 226 படங்களிலிருந்து 25 திரைப்படங்கள் தேர்வாகியுள்ளது. இந்த 25 படங்களில் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கூழாங்கல்’ தமிழ் படமும் திரையிடப்படவுள்ளது.

Exit mobile version