மகான் திரைப்படத்திலிருந்து வெளியான மாஸ் புகைப்படங்கள்!!

சியான் நடிப்பில் உருவாகியுள்ல மகான் திரைப்படத்திலிருந்து புதிய புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மகான்”. இந்த படத்தில் நடிகை சிம்ரன், வாணிபோஜன், நடிகர் பாபி சிம்ஹா, சனத் போன்ற பல திரைநட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இத்திரைப்படத்தில் வாணி போஜன் விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தில் வி.எம்.மகாலிங்கம் பாடிய “சூறையாட்டம் ” பாடல் நேற்று வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில், மகான் படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Exit mobile version