வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான வைரல் புகைப்படங்கள்!!

அஜித்குமார் நடிக்கும் ’வலிமை’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நிறைவடைந்துள்ள நிலையில், அவர் அங்கேயே தங்கி இருக்க பிளான் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித்குமார் இப்போது ’வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கபாலி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமான நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், சேஸிங் காட்சி ஒன்று படமாக்க வேண்டி இருந்தது. இந்த காட்சியை வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்டு இருந்தனர்.

கொரோனா காரணமாக அதற்கான வாய்ப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில், தளர்வுகள் வழங்கப்பட்டதால் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு பிரம்மாண்டமான சேஸிங் காட்சியை 10 நாட்கள் செலவிட்டு படக்குழு படமாக்கியது. அதை முடித்துவிட்டு அனைவரும் திரும்பிய நிலையில், நடிகர் அஜித்குமார் மட்டும் இன்னும் ரஷ்யாவிலேயே தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ரஷ்யாவில் படப்பிடிப்பை முடித்த அஜித், அந்நாட்டில் சுமார் 5000 கிலோமீட்டர் பைக்கில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே ரஷ்ய பைக் வீரர்கள் சிலரை சந்தித்து ஆலோசித்திருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்யாவில் உயர் ரக பைக் மற்றும் வீரர்களுடன் அஜித் நிற்கும் புகைப்படங்களும் சமூக வலை தளங்களில் வெளி யாகின.

இந்நிலையில் தல அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

Exit mobile version