பிரபல திரைப்படப் பாடகி காலமானார்..!!

sangeetha
Sangeetha Sajith

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக இருந்த சங்கீதா சஜித் உடல்நலக் குறைவால் காலமானார்.

தமிழில் மிஸ்டர். ரோமியோ படத்தில் இடம்பெற்ற ‘தண்ணீர் காதலிக்கும்’ என்கிற பாடல் மூலம் பிரபலமானார். அதேபோல சமீபத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘குருதி’ படத்திலும் இவர் பாடல் பாடி இருந்தார்.

இவருக்கு சமீபத்தில் சஜித் சிறுநீரக கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளாவின் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுவரை தென்னிந்திய மொழிகளிலும் இந்தியில் 200-க்கும் அதிகமான பாடல்களை அவர் பாடியுள்ளார். பாடகி சங்கீதா சஜித் மறைவுக்கு பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.

Exit mobile version