இன்று வலிமை திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ ரிலீஸ்? உற்சாகத்தில் ரசிகர்கள்!!

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடியாத நிலையில் தள்ளிப்போனது.

இந்நிலையில் படப்பிடிப்பு முழுமையும் நிறைவடைந்து திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்திலிருந்து மோஷன் போஸ்டர், வேற மாறி மற்றும் அம்மாவினை கொண்டாடும் மதர் சாங் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 

வலிமை படத்தின் பைக் சண்டைக்காட்சிகளின் BTS புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இன்று மாலை வலிமை திரைப்படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அல்லது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version