ராஜமெளலி மீது அதிருப்தியில் இருக்கும் போனி கபூர்!

ராஜமெளலி இயக்கத்தில் அடுத்து சுமார் 400 கோடி பட்ஜெட்ல உருவாகிட்டு வர கொண்டிருக்கும் படம் ’RRR’.

’நான் ஈ’, ‘பாகுபலி’ என பல ஹிட் படங்களை தமிழ் மற்றும் தெலுங்கில் கொடுத்தவர் இயக்குநர் ராஜமெளலி.

இவரது இயக்கத்தில் அடுத்து சுமார் 400 கோடி பட்ஜெட்ல உருவாகிட்டு வர கொண்டிருக்கும் படம் ’RRR’. ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், அலியாபட் என பலரும் நடிக்க இருக்கும் இந்த படம் ஃபிக்‌ஷனல் கதையாக சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை அடிப்படையாக கொண்டு வரும் இது எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா சூழல் காரணமாக இடையில் படப்பிடிப்பு நின்று போனது. இதன் பிறகு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளோடு படம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து இந்த வருடத்திற்குள் படம் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வருடம் அக்டோபர் 13 அன்று படம் வெளியாகும் என அப்டேட் படக்குழு கொடுத்துள்ளது. இந்த செய்தியால் போனி கபூருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE- ‘பொன்னியின் செல்வன்’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்! #PhotoAlbum

ஏனெனில் அவரது தயாரிப்பில் வெளியாகும் ‘மைதான்’னும் அக்டோபர் 15ல் வெளியாவதால், கொரோனா சூழலில் இரண்டு பெரிய ஹீரோக்களின் படம் வெளியாவது வசூலை பாதிக்கும் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version