என் குருவுடன் இணைந்து அரசியல் பணி மேற்கொள்வேன் ராகவா லாரன்ஸ்!!

இந்தியாவில் எதிர்வினை இல்லாமல் யாரையும் காயப்படுத்தாமல் ரஜினிகாந்தால் மட்டுமே கட்சி தொடங்க முடியும் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ வணக்கம் ரசிகர்களே மற்றும்  தோழர்களே…  சென்ற  மாதம் நான்  இங்கு ஒரு  பதிவை பதிவிட்டிருந்தேன். அதில் அரசியலுக்கு  வராமலேயே மக்களுக்கான பணியை செய்ய  இருக்கின்றேன் என  கூறியிருந்தேன். அப்படி சொன்னதற்கான விளக்கத்தை தற்போது  உங்களுக்குத்  தெரியப்படுத்துகிறேன். நான் பல  ஆண்டுகளாக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். இது போன்ற சேவைகள் அரசியலில்    குதிக்க போவதற்காக  செய்கிறீர்களா என்னிடம் பல  தோழர்கள்ரசிகர்கள், அரசியல்வாதிகள் மற்றும்  சில ஊடக நண்பர்கள் என்னிடம்  கேட்டிருந்தார்கள்.  பலர் நீங்கள் அரசியலுக்கு வந்தால் இதை விட அதிகமான  சேவைப் பணிகளை மேற்கொள்ள முடியும் என எனக்கு  அறிவுரை அளித்தார்கள். அனைவருக்கும்  நான்சொல்ல விரும்புவது  ஒன்றுதான் ‘நான்  மிகவும்  சாதாரண மனிதன்’. என்னால்  நீ  இயன்றதை பிறருக்கு செய்ய விரும்புகிறேன். அதையே செய்து கொண்டிருப்பேன். இதற்கு  முந்தைய ஆட்சியில்  கலைஞர், ஜெயலலிதா ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் என பலர் எனக்கு உதவி  அளித்துள்ளார்கள். அதேபோல தற்போது  எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் என அனைவரும் எனக்கு  உதவிகள் புரிந்துள்ளனர். தனிமனிதனாக  இப்போது செய்யும் சேவைகளை விட நான் அரசியலில் இருந்தால் இன்னும் அதிக  சேவைப் பணிகளில் ஈடுபடமுடியும் என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால்  எனக்கு எதிர்மறை அரசியல் செய்வதற்கு  உடன்பாடில்லை அது அறவே எனக்கு பிடிக்காது.

அரசியலில்  வந்து  விட்டால் எதிர்மறையாக ஒருவரை பற்றி  கருத்துத் தெரிவிக்க வேண்டியிருக்கும்.  அதுபோல் எதிர்வினை  செய்யாமல்யாரையும் புண்படுத்தாமல் கட்சி ஆரம்பிக்க அது என்னுடைய குரு ரஜினிகாந்த் – ஆல் மட்டுமேசெயல்படுத்த முடியும்.  இன்றுவரை  அவர் அரசியல்  காரணமாக  யாரையும் காயப்படுத்தியது இல்லை. இனியும்  கூட அவர்யாரையும் காயப்படுத்தமாட்டார் என  முழுவதுமாக நம்புகிறேன்.  அவர்  ஆன்மீக அரசியல் தொடங்கினால் அவருடைய பல  கோடி  தொண்டர்களில் நானும் ஒருவனாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பணிகளை மேற்கொள்ள கொண்டிருக்கிறேன்” என  ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version