“ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது”

ஜோதிகாவையும், கங்கனாவையும் ஒப்பிடவே கூடாது என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும், கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சந்திரமுகி 2 படத்தில் நடித்தது தனக்கு பெருமை என்றும், கங்கனா இந்த படத்தில் நடித்தது பெரிய பிளஸ் என்றும் தெரிவித்தார். படத்தில் கங்கனாவையும், ஜோதிகாவையும் ஒப்பிடவே கூடாது என்றும் அவர் கூறினார். ஜோதிகா சந்திரமுகியாக தன்னை நினைத்துக் கொண்டார், ஆனால், கங்கனா தான் ரியல் சந்திரமுகி என்றும் லாரன்ஸ் தெரிவித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரைக்கு வருகிறது.

Exit mobile version