திருமண மண்டபத்தை திறக்கவில்லை…சொத்துவரியா ? ரஜினி நீதிமன்றத்தில் வழக்கு

ரஜினி சொத்து வரிக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுதாக்கல்.

கொரோனா காலத்தில் அரசு விதித்துள்ள ஊரடங்கு காரணமாக  தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை திறக்கவே இல்லை அதனால்  மண்டபத்திற்கு விதித்துள்ள சொத்துவரியை ரத்து செய்ய உத்தரவிடும் படி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரஜினிகாந்த் மனுதாக்கல் செய்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில். நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இதற்கு அசர் முறைப்படி சொத்துவரி கட்டிவருகிறார்.

ஆனால் இந்த வருடத்தில் இறுதியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி கட்டியிருக்கிறார்.  பின்னர் மார்ச் 24 ஆம் தேதி மத்திய அரசு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தியதால் அப்போதிலிருந்து யாருக்கும் மண்டபம் வாடகைக்கு விடவில்லை ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கும்  பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஏப்ரல் – செப்டம்பவர் மாதத்திற்காகன சொத்துவரியாக ரூ.6.50 லட்சம் செலுத்த வேண்டுமென செப்டம்பர் 10 ஆம் தேதி பில் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ரஜினியின் சட்ட ஆலோசகர் விஜயன் சுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இதற்கு அசர் முறைப்படி சொத்துவரி கட்டிவருகிறார்.

ஆனால் இந்த வருடத்தில் இறுதியாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி சொத்துவரி கட்டியிருக்கிறார்.  பின்னர் மார்ச் 24 ஆம் தேதி மத்திய அரசு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தியதால் அப்போதிலிருந்து யாருக்கும் மண்டபம் வாடகைக்கு விடவில்லை ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கும்  பணம் திருப்பிக் கொடுக்கப்பட்டது எனவே காலியாக இருந்த மண்டபத்திற்கான சொத்து வரியை ரத்து  செய்ய வேண்டும் என்று மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மனு மீது இன்று விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version