என் பிறந்தநாள் அன்று ரசிகர்கள் யாரும் எனது வீட்டிற்கு செல்ல வேண்டாம் : ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வலியுறுத்தல்

“அண்ணாத்த” படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்திற்கு செல்வதால் என் பிறந்தநாள் அன்று ரசிகர்கள் யாரும் என் வீட்டிற்கு செல்ல வேண்டாம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை:

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்க்காக வரும் ஜனவரி மாதத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஒன்றை தொடங்க இருக்கிறார்.பல ஆண்டுகள் அரசியல் நிலைப்பாடு குறித்து அவ்வப்போது தனது படம் வெளியாகும் நேரத்தில் கட்சி தொடங்குவதை பற்றி பேசும் நடிகர் ரஜினிகாந்த்,தற்போது முழுநேர அரசியலில் களம் இறங்குகிறார்.கட்சி தொடங்குவதற்க்கான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் “அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார்.தற்போது இந்த படத்தினை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிப்பதற்காக ரஜினிகாந்த் சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.அதனை தொடர்ந்து படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றுள்ள ரஜினி ,வரும் டிசம்பர் 12 ம் தேதி தனது பிறந்த நாள் அன்று போயஸ் கார்டனில் உள்ள எனது வீட்டிற்கு முன்பு ரசிகர்கள் யாரும் என்னை பார்ப்பதற்காக வரவேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

Exit mobile version