வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் ரன்வீர் சிங்!!

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் முதல் முறையாக இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சர்ச்சையில் இருப்பதால் இயக்குநர் ஷங்கர் ‘ராம் சரண் 15’ படத்தை சமீபத்தில் அறிவித்தார். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இத்திரைப்படத்தினை முடித்த பின் இந்திய்யன் 2 படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜானி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்கிறார். தமன் இசையமைக்கிறார். ராம் சரண் இரட்டை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு நாயகியாக கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் இரண்டாவது முறையாக ராம்சரணுடன் ஜோடி சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பூஜையில், இயக்குநர் ராஜமெளலி, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், நடிகை கியாரா அத்வானி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.அந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தற்போது பூஜையில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலுடன் கலந்துகொண்ட ரன்வீர் சிங்கின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ரன்வீர் சிங் எப்போதும் இவ்வாறான வித்தியாசமான முறையில் வருவது வழக்கம் தானே என ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Exit mobile version