ரியல் தந்தையை “ரீலில்” உருவாக்கிய கெளதம் மேனன்!!!

மின்னேலே என்ற திரைப்படம் வந்த போது கெளதம் மேனன் ஒரு சாதாரணமான காதல் படங்களை எடுக்கும் இயக்குனர் என்று என நினைத்து இருந்தனர்.

ஆனால் அவருடைய இரண்டாவது படமான “காக்க காக்க”வந்த போதுதான் திரை உலகம் அவரை திரும்பி பார்த்தது, அதுவரை ஒரு படத்தை அவ்வளவு ஸ்டைலிஷகா யாரும் எடுத்தது இல்லை.

அதுவரை பிரமாண்ட செட், கிராபிக்ஸ் பார்த்த தமிழ்பட ரசிகர்களுக்கு பெரிய பிரமாண்டம் இல்லை வெளிநாடு இல்லை, உச்ச பட்ச கிராபிக்ஸ் இல்லை ஆனால் படம் அவ்வளவு ஸ்டைலிஷ், ரசிகர்கள் வியந்து போயினர் அடுத்த கமல்ஹாசனை வைத்து எடுத்த “வேட்டையாடுவிளையாடு”படம் அவருக்கு வேறு ஒரு பாதை அமைத்து கொடுத்த படமாகும்.


பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் பட ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த அவர் சில காலமாக சில சறுக்கல்களை சந்தித்துள்ளார்.தயாரிப்பு நிறுவனம் கடன் போன்ற வற்றால் விக்ரமுடன் கூட்டணி வைத்த திரைப்படம் கிடப்பில் உள்ளது.

தற்போது அவர் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வாரணம் ஆயிரம் திரைப்படம் வியாபாரரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும்.அந்த படம் இப்போதும் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அந்த அப்பா மகன் உறவு வடிவமைக்கப்பட்ட விதம்தான் அந்த படத்தை பார்த்த பிறகு தான்
இன்றைய பிரபல இயக்குனர் “வெற்றிமாறன்” புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அந்த அப்பாவின் வடிவமைப்பு கெளதம் மேனனின் அப்பாவின் தாக்கம் தான் என இப்போது தெரிய வந்துள்ளது ,கெளதம் மேனன் தன் குடும்ப புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

ரியல் தந்தையை “ரீலில்” உருவாக்கிய கெளதம் மேனன்!!!

அந்த புகைப்படத்தில் உள்ள அவரின் தந்தை வாரணம் ஆயிரம் படத்தில் வரும் சூர்யாவின் தந்தையின் தோற்றத்தில் உள்ளது அந்த புகைப்படம் இப்போது “ட்ரெண்ட்”ஆகி வருகிறது.

Exit mobile version