95-ஆவது ஆஸ்கா் விழா 2023-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது. நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது. அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், ‘ஒரிஜினல் பாடல்’ என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது. ஆர்ஆர்ஆர் இன் நாட்டு நாடு சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) குறுகிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது. திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது.
இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர். சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான நாமினேஷனில் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட குஜராத்தி படமான ‘செல்லோ ஷோ’ இடம்பெற்றுள்ளது.
பான் நளின் இயக்கிய, செல்லோ ஷோ’ (ஆங்கிலத்தில் கடைசி திரைப்படக் காட்சி) என்பது சவுராஷ்டிரா கிராமத்தில் ஒரு சிறுவனின் சினிமா மீதான காதலைப் பற்றி குஜராத்தி மொழியில் உருவான படமாகும். சித்தார்த் ராய் கபூர் மற்றும் தீர் மோமாயா ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் சர்வதேச திரைப்படத்தின் இறுதிப்பட்டியலில் இடம் பெற்று உள்ளது. அகாடமியின் அதிகாரப்பூர்வ இணையதள தகவல் படி அர்ஜென்டினா,1985 (அர்ஜென்டினா), டெசிஷன் டு லீவ் (தென் கொரியா), ஆல் கிவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரண்ட் (ஜெர்மனி), கிளோஸ் (பெல்ஜியம்) மற்றும் தி பிளூ காப்தான் (மொராக்கோ) உள்ளிட்ட 14 படங்களுடன் செல்லோ ஷோ போட்டியிடும்.