திருச்சி எம்ஏஎம் கல்லூரிக்கு தேர்வு எழுத வந்த சாய்பல்லவி! பிரேமத்துடன் செல்பி மற்றும் ஆட்டோகிராஃப் வாங்க முண்டியடித்த சகதேர்வாளர்கள்.
இந்திய நடிகையும், நடனக் கலைஞருமான இவர் தென்னிந்திய திரைப்படங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறார். 2015 ஆம் ஆண்டில் வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக ஓடிய மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பொதுமக்களின் கவனத்தை இவர் ஈர்த்தார்.
நேற்று திருச்சியில் தேசிய தேர்வு ஆணையத்தின் தேர்வினை எழுத உள்ள எம்ஏஎம் கல்லூரிக்கு சாய்பல்லவி வந்திருந்தார். அவரைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த சக தேர்வர்கள் அவருடன் செல்ஃபி எடுத்தும், ஆட்டோகிராப் வாங்கியும், தங்களுடைய பிரியத்தை வெளிப்படுத்தினர்.
அனைவருக்கும் மிகவும் பொறுமையாக ஆட்டோகிராப் மற்றும் செல்பி எடுத்து விட்டு சென்றார் சாய்பல்லவி.