தெலுங்கு நடிகர் நாகசைதன்யா – சமந்தா இருவரும் தங்களது விவாகரத்து குறித்து சில வாரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இவர்கள் இருவரது பிரிவுக்கான உண்மையான காரணத்தை இருவருமே இதுவரை பகிரங்கமாக கூறவில்லை. ஊகங்களின் அடிப்படையில் செய்திகள் கசிந்துவருகிறது. குறிப்பாக சமந்தாவிற்கு எதிரான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.
திருமண பந்தங்கள் முடிவுக்கு வந்துவிட்டால் பொதுவாக பெண்கள் பலவீனமானவர்களாக மாறிவிடுவார்கள். அல்லது மாற்றப்பட்டு விடுவார்கள். ஆனால் சமந்தா விஷயத்தில் இவை இரண்டும் நடக்காமல் ,சோர்ந்து போய் விடாமல், படப்பிடிப்பு, ஆன்மீக பயணம் வழிபாடு என சுற்றி வருகிறார் சமந்தா. தான் சிறிது மன சோர்வில் இருப்பதாகவும் தன்னை எதுவும் பலவீனம் செய்ய முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களை பெற்ற பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாக ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார் சமந்தா..
அதில், உங்கள் மகள் யாரை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பதை பற்றி கவலைப்படுவதை விட்டுவிட்டு, உங்கள் மகளை வலிமையானவளாக தயார் செய்யுங்கள். அவளது திருமணத்திற்காக பணம் சேர்த்து வைப்பதற்கு பதிலாக அவளது கல்விக்கு செலவிடுங்கள். முக்கியமாக அவளை திருமணத்திற்கு தயார் செய்வதற்கு பதிலாக அவளை அவளாகவே வாழும் படி தயார் செய்து கொள்ளும்படி உருவாக்குங்கள். அவளுக்கு தன்னைத்தானே நேசிக்கவும் தன்னம்பிகையை வளர்த்துக் கொள்ளவும் கற்றுக் கொடுங்கள் என ஒரு வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார் நடிகை சமந்தா.