கர்ணன் படத்தை பார்த்து ரிவ்யூ சொன்ன சந்தோஷ் நாராயணன் வைரல் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் ‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. இந்தப் படத்தில் தனுஷூக்கு கதாநாயகியாக, மலையாள நடிகை ராஜீஷா விஜயன் நடித்துள்ளார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிகர் யோகி பாபு, லால் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சந்தோஷ் நாரயணன், அவரது ட்விட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தை பார்த்து திகைத்துபோனதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ கர்ணன் படத்தை பார்த்து திகைத்து விட்டேன். தனுஷ், மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவை நினைத்து பெருமை படுகிறேன். கர்ணன் அனைத்தும் கொடுப்பான்” என்று குறிப்பிட்டுள்ளார்.