பாசமான தம்பியால் தப்பித்த நடிகை சனுஷா

பாசமான தம்பியால் தற்கொலை எண்ணத்திலிருந்து மீண்டதாக நடிகை சனுஷா தெரிவித்தார்.

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை சனுஷா. தமிழில் காசி, அரண், பீமா, ரேணிகுண்டா, நாளை நமதே, நந்தி, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை சனுஷா கூறும்போது, “ கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியபோது, என் வாழ்க்கையிலும் மற்றும் திரைத்துறை தொடர்பாகவும் சிரமங்கள் ஏற்பட்டன. என் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று பெரிய பயம் ஏற்பட்டது.

இதனால் கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு, தூக்கம் வராமல் தவித்தேன். ஒருகட்டத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்று யோசித்தேன். விபரீதமான அந்த நேரத்தில், என்மீது பாசம் கொண்ட தம்பி ஞாபகத்துக்கு வந்தான். நான் தற்கொலை செய்துகொண்டால், அவனால் தாங்கிக் கொள்ளவே முடியாது என்பதை நினைத்து மனம் மாறிய நான், அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டேன். பின்னர் டாக்டர்களைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றேன். இப்போது மீண்டும் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன்” என்றார்.

Exit mobile version