செல்வராகவன் – தனுஷ் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

தனுஷ், இயக்குநர் செல்வா இணையும் மற்றொரு படத்தின் ஷூட் தொடங்கி விட்டது என தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராகவன் அறிவித்து இருந்தார்.

கடந்த 2010ல் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியானது.

தற்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் தனுஷ் மீண்டும் இணையும் ‘ஆயிரத்தில் ஒருவன்2’க்கான அறிவிப்பு புத்தாண்டு அன்று வெளியானது. இதனையடுத்து படம் 2024ல் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது தனுஷ், இயக்குநர் செல்வா இணையும் மற்றொரு படத்தின் ஷூட் தொடங்கி விட்டது என தகவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராகவன் அறிவித்து இருந்தார்.

ஸ்டுடியோவில் இருப்பது போல செல்வராகவன் ஒரு படத்தை வெளியிட்டு, ‘Back to my world’ என்ற கேப்ஷனோடு இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். மேலும் படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா என்பதையும் இதில் தெளிவு படுத்தி இருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க, அரவிந்த் கிருஷ்ணா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

READ MORE- ‘மாஸ்டர்’- செலிபிரிட்டி விமர்சனம்!

தற்போது இந்த படத்தின் டைட்டில் லுக் இன்று மாலை 7 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version