சர்வதேச போதை கும்பலுடன் ஷாருக் மகனுக்கு தொடர்பு? சொகுசு கப்பல் உரிமையாளருக்கு சம்மன்

“ரேவ் பார்ட்டி” நடந்த சொகுசு கப்பல் உரிமையாளருக்கு மும்பை சரக போதை பொருள் தடுப்பு பிரிவினர் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பினர்.

டெல்லி, கடந்த 2 தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை விருந்து “ரேவ் பார்ட்டி” நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டத்தில் போதை பொருட்களை பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பார்ட்டியில் பங்கேற்ற பல நட்சத்திரங்களில் ஷாருக்கான் மகன் ஆரியன் கானும் ஒருவர் ஆவர்.

இந்நிலையில், நேற்று மும்பை நீதிமன்றம் விசாரணைக்காக 7ம் தேதி வரை ஆரியன் கானை போதை பொருள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்ட நிலையில், விசாரணை வலையத்தை விரிவு படுத்தியுள்ளனர். குறிப்பாக, யார் இந்த ரேவ் பார்ட்டி நடத்தினார்கள் ? அங்கு பயன்படுத்த பட்ட போதை பொருள் கப்பலுக்கு எப்படி வந்தது ? எங்கிருந்து வாங்கி வந்தார்கள் ? தரகர் யார் ? சர்வதேச மாஃபியா உள்ளதா ? என பல கோணங்களில் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். இந்நிலையில், சொகுசு கப்பலின் உரிமையாளருக்கு 2வது முறையாக நேரில் ஆஜராக கூறி மும்பை சரக போதை பொருள் தடுப்பு பிரிவினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

சொகுசு கப்பலின் உரிமையாளரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் விசாரணை வளையம் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version