கொரோனா தொற்றால் ஹிகா மல்ஹோத்ரா மருத்துவமனையில் அனுமதி.
இந்தக் கொரோனா தொற்று வேறுபாடில்லாமல் அனைவரையும் தாக்கி வருகிறது.
உலகப் பொருளதாராம் ஒருபக்கம் மந்த நிலை காணப்பட்டாலும்கூட மக்களும் வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஷிகா மல்ஹோத்ரா என்ற நடிகை தன்னார்வத்துடன் கொரோனா வார்டில் செவிலியர் பணியில் ஈடுபட்டார்.
தற்போது அவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் சுவாஷிக்கும் ஆக்ஷிஜன் அளவு குறைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா நோய்த்தொற்றில் யாரும் அலட்சியம் காட்டாமல் சிறந்த முறையில் நோய்த்தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
அவரது ரசிகர்கள் அவருக்கு கொரோனா தொற்று விரைவில் குணமடைய வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.