’சில்லுக்கருப்பட்டி’ புகழ் நடிகர் ஸ்ரீராம் காலமானார்! #RIPSreeram

‘சில்லுக்கருப்பட்டி’ புகழ் நடிகர் ஸ்ரீராம் விபத்தால் இறந்துள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ன் இறுதியில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டான படம் ‘சில்லுக்கருப்பட்டி’.

படம் பல விருதுகளை வாங்கி குவித்ததோடு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடித்தவர்களில் நடிகர் ஸ்ரீராமும் ஒருவர்.

இவர் மாடியில் இருந்த போது தவறி விழுந்து இறந்துள்ள செய்தி தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஒரு மார்ஷியல் ஆர்ட் இன்ஸ்ட்ரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான பயிற்சியில் மாடியில் இருந்த போதுதான் தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது. இவருக்கு வயது 60. இவரது எதிர்பாராத இறப்பு திரைத்துறையை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Exit mobile version