ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் தான் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு பனிகளை செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படமானது இந்த ஆண்டு ஓணம் நாளில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. சமீபத்தில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டீசர் ஜூன் 28-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில் அதனை பல்வேறு மொழிகளில் வெளியிடவுள்ள பிரபலங்கள் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிம்புவும் தெலுங்கு டீசரை நடிகர் மகேஷ் பாபுவும் கன்னட டீசரை நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் வெளியிட தயாராக உள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழுவானது அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு வெளியிடும் துல்கர் பட டிசர்!
-
By mukesh

Related Content
ISRO-வில் புதிய வேலைவாய்ப்பு; விஞ்ஞானி முதல் தொழில்நுட்ப உதவியாளர் வரை விண்ணப்பிக்க வாய்ப்பு!
By
daniel
August 31, 2026
இந்தியாவில் பாலிமர் ரூபாய் நோட்டுகளா? புதிய நிபந்தனைகளுடன் தயாராகிறது ரிசர்வ் வங்கி!
By
daniel
August 31, 2026
ஆசிய மகளிர் கோப்பை: தாய்லாந்தை வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கிய இந்தியா!
By
daniel
August 31, 2026
68.5 டன் நிவாரணம்… 8 பாலங்கள்… மீட்புக் குழுக்கள்; தோள் கொடுக்கும் தோழனாக இந்தியா!
By
daniel
August 30, 2026
நேபாளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் மீட்பு!
By
daniel
August 30, 2026
HDFC Bank CEO சஷிதர் ஜகதீஷன் விலகுகிறார்; அக்டோபர் 26-ல் ஓய்வு!
By
daniel
August 30, 2026