கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் சிலம்பரசன் மும்பை சென்றுள்ளார்.
‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்கு பிறகு சிம்பு – கெளதம்மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.
சிம்புவின் 47-வது படமாக எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷனின் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முற்றிலும் கிராமத்து பின்னணியில் வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லரில் உருவாகும் இப்படத்திற்காக சிம்பு மேலும் எடை குறைத்து சிறுவன் போல காட்சியளிக்கிறார்.
திருச்செந்தூரில் தொடங்கிய இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பினை நிறைவு செய்துள்ளது.
இந்த நிலையில், இன்று முதல் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் சிம்பு விமானத்தில் செல்லும் புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதோடு, அவர் மும்பை சென்றவுடன், ஏர்போர்ட்டில் நடந்து செல்லும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.