2020 சேலஞ்சிற்கான புகைப்படங்களை பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வரும் நிலையில், நடிகை சிம்ரனும் இதில் இணைந்து புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு தொடக்கமே மக்களை கொரோனா வைரஸின் மூலம் இன்னலுக்கு ஆளாக்கியது. இந்த நிலையில் தான் 2020 ஆம் ஆண்டு எப்படி கடந்து செல்கிறோம்? என்பது பற்றி நகைச்சுவையாக ஜனவரி முதல் செப்டம்பர் வரை புகைப்படங்களை எல்லாம் இணைத்து பிரபலங்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையி்ல் தமிழ் ரசிகர்களின் மனதில் இருந்து என்றும் நீங்காத கனவுக்கண்ணியான சிம்ரனும் தனது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.