சிவகார்த்திகேயன்க்கு இங்கிலீஷ் டீச்சரான ரகுல்!

ரகுல் ப்ரீத் சிங்தான் தனக்கு ஆங்கிலம் சொல்லி கொடுத்ததாக பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

’இன்று நேற்று நாளை’ படத்துடைய இயக்குநர் அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் இதில் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார்.

கொரோனா சூழலுக்கு பிறகு படம் ஷூட் மீண்டும் தொடங்கி தற்போது இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறது. படம் முடிய இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் சிவகார்த்திகேயன், இயக்குநருடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ரகுல் பகிர்ந்துள்ளார்.

READ MORE- பிக்பாஸ்க்கு பிறகு ஆரிக்கு குவியும் வாய்ப்புகள்!

இந்த ட்வீட்டை கோட் செய்து சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘உங்களுடன் வேலை செய்ததில் மகிழ்ச்சி ரகுல். என்னை எல்லா நேரமும் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி. நான் ப்ரிட்டிஷ் இங்கிலீஷ் பேசினேன் என நினைக்கிறேன்’ என கலகலப்பாக பதிவிட்டுள்ளார். படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் அதிகாரப்பூர்வமாக எதிர்ப்பார்க்கலாம்.

Exit mobile version