ஐபில்க்கு சமமாக வைரலாகி வரும் கண்ணம்மா மீம்ஸ்கள்.
பொதுவாகவே தொலைகாட்சி தொடர்கள் என்பது இல்லத்தரசிகளுக்கானது என்பது காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் ஒன்று. சீரியல்களை அம்மாவுடனும் மனைவியுடனும் பார்த்துவிட்டு சீரியல்கள் பார்க்க மாட்டேன் என பாசாங்கு செய்யும் ஆண்களும் உண்டு. ஆனால் சமீப நாட்களில் பாரதிக் கண்ணம்மா என்னும் சீரியலுக்கு சமூக வலைத்தளங்களில் ஐபில்க்கு சமமாக மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
யார் இந்த கண்ணம்மா?
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒன்பது மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் இடையேயான அழகான காதல் கதை, வழக்கம் போல் தொலைக்காட்சி தொடருக்கான கதை முடிச்சுகளுடன் கூடியது.
எல்லாத் தொடர்களிலும் உள்ள கதை போல் கதாநாயகனை ஒருதலையாக காதலிக்கும் வில்லியால் பாரதி தன் மனைவியின் மீது சந்தேகப்படுகிறான். இதனால் கண்ணம்மா வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
இந்த தொடர் இந்த அளவுக்கு வைரலாக காரணம் என்ன?
லாக்டவுன் காலத்தில் பெரும்பாலும் அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சரியாக ஐபில் நேரத்தில் பாரதி கண்ணம்மாவில் அனல் பறக்கும் காட்சிகள் என இந்த எபிசொட் ஒளிபரப்பப்பட்டது.
வீட்டை விட்டு வெளியேறும் கண்ணம்மா தங்க இடம் கிடைக்காமல் ரோட்டில் நடந்து செல்வது போல் காட்சி மூன்று நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பப்பட்டது தான் இந்த சீரியல் வைரல் ஆக்கப்பட்டதற்கான காரணம்.
என்னதான் இந்த சீரியல் இப்படி மீம்ஸ் கிரியேட்டர்களால் கேலி செய்யப்பட்டாலும் நம் இல்லத்தரசிகளின் ஆதரவால் TRP ரேட்டில் மற்ற சீரியல்கள் அனைத்தையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது. இந்த மீம்ஸ்களுக்கு பிறகு பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பார்வையாளர்களும் அதிகரித்து விட்டனர்.