கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் ‘சூரரைப்போற்று’ பிரபலம் இணைந்துள்ளார்.
‘துருவங்கள் பதினாறு’, ‘மாஃபியா’ போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 43வது படம் குறித்தான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இதில் நாயகியாக மாளவிகா மோகனனும், தனுஷூக்கு தங்கையாக ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் ஸ்ம்ருதி வெங்கட்டும் நடிக்க இருக்கிறார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்தது. மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் பூஜை தொடங்கப்பட்டு படத்திற்கான முதல் பாடலும் வேலையும் முடிந்தது.
READ MORE- ‘எல்லா புகழும் உங்களுக்கே…’- ஆரியின் நெகிழ்ச்சி பதிவு!
இதனை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து தற்போது இந்த படத்தில் ‘சூரரைப்போற்று’ படத்தில் சே கதாப்பாத்திரத்தில் நடித்த கிருஷ்ணகுமார் இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.