நடிகை ஸ்ருதிஹாசன் பதிவிட்ட அவரது இளமைக்கால புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் நடிகை ஸ்ருதிஹாசன் ஆவார். நடிகை, இசையமைப்பாளர், பாடகர், என பன்முக திறமை கொண்டவர். தமிழில் ஏழாம் அறிவு என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்பொழுது விஜய்சேதுபதியுடன் லாடம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் தன்னுடைய பள்ளிப்பருவ கால புகைப்படம் ஒன்றை பதிவிட்டார் அந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.