தளபதி 67 படத்தின் அசத்தலான அப்டேட்… மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி!!

தளபதி விஜய்யின் அடுத்தடுத்த திரைப்பட அப்டேட்டுகளால் திக்குமுக்காடி போய் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள்.

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக உள்ள தகவல் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் தற்போது இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

தளபதியின் 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். விஜய்யின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் வெற்றிமாறன் தளபதி 67வது திரைப்படத்தை இயக்கவிருப்பதாக தெரிகிறது.

இதற்கடுத்து தளபதி 68 படம் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. அதன்படி தளபதியின் 68வது திரைப்படத்தினை மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Exit mobile version