சூர்யாவுக்கு ஜோடியாகும் ‘டாக்டர்’ ஹீரோயின்! #Suriya40

சூர்யாவின் அடுத்த படத்தில் ‘டாக்டர்’ பட ஹீரோயின் ஜோடியாகிறார்.

‘சூரரைப்போற்று’ வெற்றிக்கு பிறகு சூர்யா தனது 40வது படத்திற்காக இயக்குனர் பாண்டிராஜ்ஜூடன் இணைகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

படத்திற்கு இசையமைக்கிறார் இமான். இந்த செய்தியை சன்பிக்சர்ஸ் நிறுவனம் இமானின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதனையடுத்து இந்த செய்தியை மகிழ்ச்சியாக சூர்யா ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கினர்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் உருவாகும் ‘அண்ணாத்த’விற்கும் இமான்தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE- ட்ரெண்டாகும் ஷ்ருதிஹாசனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்! #HBDShruthiHaasan

இதனையடுத்து தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன்க்கு ஹீரோயினாக நடிக்கும் பிரியங்கா மோகன் நடிக்கிறார். இதனை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

Exit mobile version