விஜய் டிவி பிரபலத்தின் குத்தாட்டம்..என் பொண்டாட்டி தான் பெஸ்ட் என கணவர் கமெண்ட்

சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் நடனத்தை புகழ்ந்து தள்ளிய கணவர் சஞ்சீவ்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆல்யா மானசா, சீரியல் ரசிகர்களை கடந்து இளசுகள் மனதிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார்.

அந்த சீரியல் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், அதில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவையே காதல் திருமணம் செய்தார் மானசா.
இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண்குழந்தை பிறந்த நிலையில், குழந்தையின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வந்தன.

சீரியல் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இந்த ஜோடி மீண்டும் சேராதா என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இதனிடையே, மானசாவின் கணவர் சஞ்சீவ் நாடகங்களில் நடிக்க தொடங்கியுள்ள சமயத்தில், விரைவில் மானசாவும் நடிப்பிற்கு கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இடைப்பட்ட காலத்தில் இணையத்தில் அதிக அளவில் ஆர்வம் காட்டி வரும் மானசா அவ்வப்போது, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார். அவ்வாறு, சமீபத்தில் அவர் நடனமாடி வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிக அளவில் பரவி வருகிறது.

நட்பதிகாரம் படத்தில் தேவா பாடியுள்ள ‘சொல்லடி சொல்லடி செல்லம்மா” எனும் பாடலுக்கு நையப்புடைத்த மானசா, க்யூட் ரியாக்சன்களை அள்ளிபோட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஏராளமான ரசிகர்கள் இந்த நடனத்தைக் கண்டு கருத்து பதிவிட்டு வரும் நிலையில், அவருடைய கணவர் சஞ்சீவ், ஆல்யா ரியாக்ஷனை பீட் பண்ண எந்த பெண்ணாலும் முடியாது என புகழாரம் சூட்டியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version