தளபதிக்கு சவால் விடுத்த சூப்பர் ஸ்டார்..தமிழகம் பசுமையாக மாறுமா?

தளபதி விஜய்க்கு தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, தனது பிறந்தநாளை முன்னிட்டு கிரீன் சேலஞ்சை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை மிகவும் எளிமையாக வீட்டிலேய தனது குடும்பத்தினருடன் கொண்டாடினார். அதேசமயம், அவருடைய ரசிகர்கள் #HBDMaheshbabu என்கிற ஹேஷ்டேக்கில் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான ட்விட்டர் பதீவுகளை வெளிட்டு தேசிய அளவில் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.

இதனிடையே, கொரோனா ஊரடங்கு நேரத்தில் பிரபலங்களை துடிதுடிப்புடன் வைத்து கொள்ள பல சவால்கள் சமூகவலைதளங்களில் விடுக்கப்பட்டது. அவற்றில் அனைத்து பிரபலங்களையும் மிகவும் கவர்ந்தது கிரீன் இந்தியா சேலஞ். இதன் மூலம் பிரபலம் ஒருவர் மரக்கன்று நட்டு விட்டு, அந்த புகைப்படத்தை வெளியிட்டு மூன்று பிரபலங்களுக்கு இதுபோல் செய்து முடிக்க சவால் விட வேண்டும்.

இந்நிலையில் இந்த கிரீன் இந்தியா சேலஞ்சில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு மகேஷ் பாபு ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது, தனது பிறந்தநாளை கொண்டாட இதை விட சிறந்த வழி கிடையாது. இந்த சவாலை நான் ஜூனியர் என்.டி.ஆர், தளபதி விஜய், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுப்பதாக கூறியுள்ளார்.

இந்த சவாலை விஜய் ஏற்பாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. விஜய் இந்த சவாலை ஏற்று செய்து விட்டால், இது தமிழகத்திலும் அதிகம் பகிரப்படும் ஒரு சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version