ஏ.ஆர். ரகுமான் இசையில் “பத்து தல”பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

ஏ.ஆர். ரகுமான் இசையில் நடிகர் சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

சிம்பு ஒபிலி.என்.கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்க இருக்கிறார்.மேலும் கதாநாயகியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார்.மேலும் இந்த படத்திற்கு  கூடுதல் அழகு சேர்க்கும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version