SeithiAlai

கோடிகளை குவித்த ‘தலைவி’… ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி திரைப்படம் கடந்த செப்டம்பர் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இதில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத், எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி, அவரது மனைவி ஜானகியாக மதுபாலா மற்றும் சமுத்திரக்கனி, தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 17 நாட்களில் படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thalaivi

தலைவி படத்திற்கு போடப்பட்ட முதல் பட்ஜெட் ரூ.65 கோடியாம், அதன் பின்னர் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் செட் செலவு மற்றும் வட்டி எல்லாம் சேர்த்து ரூ.75 கோடி வரை தயாரிப்பாளர் தரப்பு செலவிட்டுள்ளது. தெலுங்கு ரைட்ஸ், சாட்டிலைட் ரைட்ஸ், டிஜிட்டல் மூலமாகவும், தமிழ் மற்றும் இந்தி டப்பிங் என ஒட்டுமொத்த உரிமையையும் ஜி நிறுவனம் 85 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இதன் மூலம் தயாரிப்பாளருக்கு 10 கோடி ரூபாய் லாபம் கிட்டியுள்ளது.

ஓடிடி தளத்தைப் பொறுத்தவரை தலைவி படத்தின் இந்தி உரிமையை நெட் பிலிக்ஸ் நிறுவனம் ரூ.24 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதேபோல் தமிழ் மற்றும் தெலுங்கு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் 18 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதன் மூலமாக 42 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. தமிழகத்தில் தலைவி படத்திற்கு தியேட்டர்களில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லையாம். தியேட்டர் ரிலீசுக்காக தயாரிப்பு நிறுவனம் 1.50 கோடியை செலவிட்ட நிலையில், 2 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்து கொடுத்துள்ளது. மீதமுள்ள 50 லட்சம் விநியோகஸ்தர்களுக்கான கமிஷன் என வைத்துக்கொண்டால், தியேட்டர் வசூல் மூலமாக தயாரிப்பாளருக்கு எதுவும் மிஞ்சவில்லை. ஆனால் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் ரைட்ஸ் மூலமாக படம் 52 கோடி ரூபாய் வரை லாபம் சம்பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version