பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக வெளியேறிய நாடியா சேங்… உண்மை காரணம் இதுவா?

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக நாடியா எலிமினேட் ஆனதற்கான உண்மை காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக யார் எலிமினேட் செய்யப்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவி வந்தது. இந்நிலையில் மலேசியாவைச் சேர்ந்த மாடல் மற்றும் டப்ஸ்மாஷ் பிரபலமான நாடியா சேங் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நாடியா சேங் சொன்ன கதைக்கு சோசியல் மீடியாவில் கடும் விமர்சனங்கள் எழுந்தது. தான் 14 வயதில் இருந்தே வேலை தான் செய்துவந்தேன், அம்மா அதிகம் ஸ்ட்ரிக்ட், போலீசிடம் அடி வாங்க வைத்தார் என நாடியா குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் அதற்கு முன்னதாக சோசியல் மீடியாவில் தன் அம்மாவை ரோல் மாடல் எனக்கூறி நாடியா போட்ட பதிவை வெளியிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் போட்டியாளராக நாடியா வெளியேறியதற்கான முக்கிய காரணம் தெரியவந்துள்ளது. மலேசியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இந்தியா வருபவர்களுக்கு 45 நாட்கள் மட்டுமே அனுமதி. நாடியா இந்தியா வந்தது, குவாரண்டைனில் இருந்து என மொத்தமாக 45 நாட்கள் முடிவுற்றதாக கூறப்படுகிறது. மேலும் நாடியா பிக்பாஸ் வீட்டிற்குள் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படாததால் அவரை முதலில் வெளியேற்ற பிக்பாஸ் டீம் முடிவெடுத்துள்ளது. எனவே தான் குறைந்த வாக்குகள் மட்டுமின்றி பர்பாமென்ஷ் அடிப்படையிலும் நாடியா சேங் வெளியேற்றப்பட்டுள்ளார்.

Exit mobile version