தமிழ் திரைப்படங்களில் ஃபர்ஸ்ட்…‘அண்ணாத்த’படைக்கப் போகும் இமாலய சாதனை!!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியிடப்படும் முதல் தமிழ் சினிமா என்ற சாதனையை படைத்துள்ளது.

இந்திய திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் தற்போது சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சி உள்ளதால் படத்தை வெளியிடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்ணாத்த படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிடவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 572 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இதுதவிர, ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14, ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் என்கிற பெருமையை ‘அண்ணாத்த’ திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version