#Thalapathy65 அறிவிப்பு எப்போது?

‘தளபதி65’ குறித்தான அறிவிப்புதான் இப்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ’மாஸ்டர்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

அந்த வகையில், முதலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என சொல்லப்பட்ட நிலையில், எஸ்.ஜே. சூர்யா, நெல்சன் திலீப் குமார் பெயர்கள் அடிப்பட்டது.

தற்போது நெல்சன் திலீப் குமார் இறுதியாகி விட்டதாகவும் விரைவில் இதனை தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் உறுதி செய்யும் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து தற்போது சோஷியல் மீடியாவில் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.

READ ALSO- ‘லாபம்’ ஓடிடி ரிலீஸ்?- விஜய்சேதுபதி விளக்கம்!

அடுத்த பொங்கலுக்கு ‘மாஸ்டர்’ரின் தியேட்டர் வெளியீடு இருக்கும் என கூறப்படும் நிலையில் ‘தளபதி 65’ யார் இயக்குவார் எனவும் அது குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் இந்த மாத இறுதியில் அதாவது டிசம்பர் 31 அன்று வெளியாகும் என சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் தகவலை வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Exit mobile version