கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் ஆரி இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 4-ன் டைட்டில் வின்னராக ஆரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு சோஷியல் மீடியாவிலும் நேரிலும் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்பே கமல் பிரச்சாரத்திற்கு சென்ற பல இடங்களிலும் ஆரியின் பெயரை சொல்லி தங்களது அன்பை வெளிப்படுத்தியிருந்தனர். மேலும் ஆரியும் இதற்கு முன்பு பல சமூக பிரச்சனைகளிலும் பங்கெடுத்து இருந்ததோடு மட்டுமில்லாமல் தனது கருத்தையும் பல இடங்களில் பதிவு செய்திருந்தார்.
இதனை அடுத்து தற்போது ஆரி கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் இன்னொரு பக்கம் அவர் சின்னம்மா கட்சியில்தான் இணைவார் எனவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
READ MORE- ‘எல்லா புகழும் உங்களுக்கே…’- ஆரியின் நெகிழ்ச்சி பதிவு!
பிக்பாஸ்ஸில் கலந்து கொண்ட பாடலாசிரியர் சிநேகனும் தற்போது கமல் கட்சியில்தான் உள்ளார். எனவே, ஆரி இந்த தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக என்ன சொல்ல இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.