பொங்கலுக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்2’?

இந்த மாதம் பொங்கலுக்கு ‘ஆயிரத்தில் ஒருவன்2’ ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் பொங்கலுக்கு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2010ல் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக், ஆண்ட்ரியா, ரீமாசென் நடிப்பில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியானது. தற்போது பத்து ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் தனுஷ் மீண்டும் இணையும் ‘ஆயிரத்தில் ஒருவன்2’க்கான அறிவிப்பு புத்தாண்டு அன்று வெளியானது.

READ MORE- விஜே சித்துவுக்கு போதை பழக்கம்? திசை மாறும் விசாரணை!

இதனையடுத்து படம் 2024ல் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது செல்வராகவன், தனுஷ், யுவன் இணையும் படத்திற்கான ஷூட் தொடங்கி விட்டது என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோவில் இருப்பது போல செல்வராகவன் ஒரு படத்தை வெளியிட்டு, ‘Back to my world’ என்ற கேப்ஷனோடு இந்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

மேலும் படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா என்பதையும் இதில் தெளிவு படுத்தி இருக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க, அரவிந்த் கிருஷ்ணா படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். பொங்கல் அன்று ‘ஆயிரத்தில் ஒருவன்2’-வின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version