ரஜினி கட்சியில் திரைப்பிரபலங்கள். என்ன நடக்கிறது உள்ளே?

நடிகர் ரஜினி ஆரம்பிக்க அதில் பல திரையுலக பிரபலங்களும் களம் இறங்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பல வருடங்களுக்கு பிறகு நடிகர் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை உறுதியாக அறிவித்ததோடு மட்டுமில்லாமல், அடுத்த வருடம் கட்சி ஆரம்பிப்பதையும் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.

READ MORE- ‘போடோ போடி’ பார்ட்2. சிம்புவை இயக்கும் விக்னேஷ் சிவன்?

மேலும் அடுத்த வருட சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இவர் தனித்தா அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுகிறாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் தெரிய வரும்.

அந்த வகையில் ரஜினியின் கட்சியில் பல திரைப்பிரபலங்களும் சேர்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நடிகர் பிரசாந்த் ரஜினிக்காக தமிழகம் முழுக்க பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனவும் சொல்லப்படுகிறது.

தற்போது அது குறித்து நடிகர் பிரஷாந்த் தெளிவுப்படுத்தியுள்ளார். ‘என்னை பற்றிய தவறான செய்தி இது. இதில் எதுவும் உண்மை இல்லை’ என கூறியுள்ளார். ‘அந்தாதூன்’ பாலிவுட் ரீமேக்கில் விரைவில் தமிழில் கம்பேக் கொடுக்கவுள்ளார் பிரஷாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version