#Thalapathy65 விஜய்- முருகதாஸ் கூட்டணி உடைய யார் காரணம்?

நடிகர் விஜய்யின் 65வது படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என உறுதியான நிலையில் அவர் படத்தில் இருந்து வெளியேற காரணம் அனிருத்தான் என சொல்லப்படுகிறது.

‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் 65 வது படத்தை யார் இயக்குவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

லோகேஷ் கனகராஜே மீண்டும் இயக்கலாம், மகிழ் திருமேனி, சுதா கொங்கரா, வெற்றிமாறன் என பலரது பெயர்களும் அடிபட்ட நிலையில் ‘கத்தி’, ‘சர்க்கார்’, ‘துப்பாக்கி’ படங்களுக்கு பிறகு மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்குவார் என உறுதியானது.

ஆனால், கதையில் சில மாற்றங்கள் மற்றும் வேறு சில காரணங்களில் தயாரிப்பு நிறுவனத்துக்கும் முருகதாஸ்க்கும் ஒத்து வரவில்லை என்ற காரணத்தால் அவர் படத்தில் இருந்து விலகி விட்டார் என தகவல் வெளியானது.

இதனையடுத்து ‘டாக்டர்’ பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார்தான் ‘தளபதி65’யின் இயக்குநர் என கடந்த சில நாட்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

https://twitter.com/sunpictures/status/1336996618105626628

மேலும், ஏற்கனவே இசையமைப்பாளர் தமன் என அறிவிக்கப்பட்ட நிலையில், திலீப்குமார் உள்ளே வந்ததும் இசையமைப்பாளராக அனிருத் பெயர் அறிவிக்கப்பட்டது. திலீப்குமார் ‘தளபதி65’க்கு உள்ளே வர காரணமே அனிருத்தான் என சொல்லப்படுகிறது.

எனவே, அவர்தான் முருகதாஸ் கூட்டணிக்கு பிறகு உள்ளே வந்து இதனை சாத்தியப்படுத்தினார் எனவும் சொல்லப்படுகிறது.

Exit mobile version