ஓடிடியில் ‘பொன்னியின் செல்வன்’?!

‘பொன்னியின் செல்வன்’ ஓடிடியில் வெளியாக பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்தினம் லைகாவுடன் இணைந்து தயாரித்து இயக்க இருக்கும் படம் ‘பொன்னியின் செல்வன்’.

நடிகர் எம்ஜிஆர் காலத்திலிருந்தே இந்த கதையை எடுக்க பலர் முயன்றும் கைவிடப்பட்டது. இந்த நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். வெளிநாடுகளில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் எடுத்து முடித்திருக்க மீதமிருக்கும் படப்பிடிப்பு நடத்தி முடிப்பதற்கு கொரோனா சூழல் வந்ததுவிட்டது.

விக்ரம், ஜெயம்ரவி, கார்திக், ஐஷ்வர்யா ராய் என படத்தில் ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடிக்கிறது. அதிக அளவிலான ஜீனியர் நடிகர் படத்திற்கு தேவைப்படுவார்கள், வெளிநாடு லொகேஷன் போக வேண்டியிருக்கும் என்பதால், படம் ஷூட்டிங் எப்போது ஆரம்பிக்கும் எங்கே ஷூட் நடத்துவார்கள் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

READ MORE- ‘மாஸ்டர்’ பொங்கல் கொண்டாட்ட வீடியோ வெளியிட்ட படக்குழு!

ஆனால், தற்போது ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படம் ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ‘பொன்னியின் செல்வன்’ திரை அனுபவத்திற்கான படம் என்பதால் படக்குழு ஓடிடியில் வெளியிட குறைவான வாய்ப்புகளே உள்ளது.

முதலில் தியேட்டரில்தான் வெளியிடும் என நம்பலாம். ஓடிடியில் பேச்சுவார்த்தை உண்மையா, மணிரத்தினம் என்ன சொன்னார் என்பது குறித்தான அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம்.

Exit mobile version