சூர்யாவுடன் இணையும் ‘சிறுத்த’ சிவா!

சூர்யாவுடன் தனது அடுத்த படத்தை சிவா இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா ‘சூரரைப்போற்று’ படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது பாண்டிராஜ்ஜின் படம், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ ஆகியவற்றில் பிஸியாக உள்ளார்.

இதில் ஒரு படத்தை முடித்து விட்டு அடுத்து ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் படத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ‘விஸ்வாசம்’, ‘வீரம்’ படங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கமர்ஷியல் இயக்குநராகி உள்ளார் சிவா.

தற்போது ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் கொரோனா சூழல் காரணமாக தள்ளி போய் மீண்டும் ஆரம்பித்து கொரோனா பாதிப்பால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த எந்தவிதமான அதிகார பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

READ MORE- சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்!

சூர்யா, சிவா இணைந்து படம் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்தனர். இந்த நிலையில் இது மீண்டும் சாத்தியமாக கூடிய சூழல் வந்துள்ளது என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்கள்.

Exit mobile version