லோகேஷ்ஷூடன் மீண்டும் இணையும் விஜய்?

லோகேஷ் கனகராஜ்ஜுடன் மீண்டும் விஜய் இணைய இருக்கிறார் என சொல்லப்படுகிறது.

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ’மாஸ்டர்’ திரைப்படம் தற்போது திரையில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது.

இதில் விஜய்யின் கதாப்பாத்திரம், அவரது நடிப்பு, கதை என அனைத்தும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இது விஜய்யின் 64வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது அடுத்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்க இருக்கிறார்.

READ MORE- ‘மாஸ்டர்’ பொங்கல் கொண்டாட்ட வீடியோ வெளியிட்ட படக்குழு!

இந்த நிலையில், விஜய்யின் 66வது படம் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ்ஷூடன் விஜய் இணைய அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக கிசுகிசுக்கின்றன கோலிவுட் வட்டாரங்கள். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருப்போம்.

Exit mobile version