’RRR’ ஷூட்டிங்கில் அலியாபட்!

ராஜமெளலி இயக்கும் ’RRR’ பட ஷூட்டிங்கில் நடிகை அலியா பட் கலந்து கொள்ள அவரது போர்ஷனுக்கான படப்பிடிப்பு தற்போது ஆரம்பித்துள்ளது.

’நான் ஈ’, ‘பாகுபலி’ என பல ஹிட் படங்களை தமிழ் மற்றும் தெலுங்கில் கொடுத்தவர் இயக்குநர் ராஜமெளலி.

இவரது இயக்கத்தில் அடுத்து உருவாகி கொண்டிருக்கும் படம் ’RRR’. ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண், அலியாபட் என பலரும் நடிக்க இருக்கும் இந்த படம் ஃபிக்‌ஷனல் கதையாக சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை அடிப்படையாக கொண்டு வரும் இது எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா சூழல் காரணமாக இடையில் படப்பிடிப்பு நின்று போனது. இதற்கு முன்பே படம் குறித்தான அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது அரசு அனைத்து படப்பிடிப்புகளுக்கும் கட்டுப்பாடுகளோடு அனுமதியளித்துள்ளது.

இதனையடுத்து ’RRR’ படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் தொடங்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங்கை இன்னும் இரண்டு மாதங்களுக்குள் எந்த ஒரு இடைவெளியும் இல்லாமல், தொடர்ச்சியாக எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் படப்பிடிப்பு தொடங்கும் போது தகவல் வெளியானது.

இதனால், அறிவித்தபடி படம் அடுத்த வருடம் ஜனவரியில் வெளியாகும் என்கிறார்கள். மேலும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் படப்பிடிப்பு ஆரம்பித்து சிறிது நாட்கள் கடந்தே கலந்து கொள்ள தற்போது நடிகை அலியாவும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அலியா.

Exit mobile version